அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குறியாக்கவியலில் அதிமுக்கியமான எண் கோட்பாடுகளில் அனுமானங்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்

Posted On: 20 JAN 2021 1:48PM by PIB Chennai

எண் கோட்பாடுகள் பற்றிய கோட்பாடு சார்ந்த ஊகங்களின் மீதான புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் விரைவில் உருவாக உள்ளன. எண் கோட்பாடுகளின் எல்- செயற்பாடுகளில் ஸ்டார்க் அனுமானங்கள், கருத்தளவான தகவல்கள் குறித்து விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். இயற்கணித எண் கோட்பாடுகளின் மையமான ஹில்பர்ட்டின் 12வது கணக்குடன் இந்த அனுமானங்கள் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோட்பாடு குறியாக்கவியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தின் கணிதவியல் துறைப் பேராசிரியரும், இந்த ஆண்டுக்கான ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகை பெற்றவருமான திரு மகேஷ் கக்டே இயற்கணிதம் கே- கோட்பாடு, இதர கோட்பாடு அமைப்புகளின் மூலம் இதுபோன்ற துல்லிய விதிமுறையை நிரூபிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690324

*****

(Release ID: 1690324)


(Release ID: 1690453)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi