தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

குறைந்த செலவிலான திரைப்படங்களையும் உலக பார்வையாளர்களிடம் ஓடிடி கொண்டு செல்கிறது : மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் திரு ஜி பி விஜயகுமார்

இணையதள திரைப்படத் திரை (ஓடிடி) முதன்முதலில் தோன்றிய போது திரையரங்குகளின் வெளியீடு நிறுத்தப்பட்டு திரைப்பட வர்த்தகம் முடக்கப்படும் என்று மிகப்பெரும் எதிர்வலை எழுந்தது. எனினும் ஏராளமான ஓடிடி, தொலைக்காட்சி சானல்கள் இருந்த போதும் பாரம்பரிய திரைப்படத் துறை, திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும். அவை, திரைப்படத்தின் பொழுதுபோக்கு வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், அதனை மேலும் லாபகரமாக மாற்றுகின்றன. ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, தற்போது 20 சதவீதமாக உள்ளது. பொதுவாக முடங்கப்படும் சராசரி, குறைந்த தொகையில் எடுக்கப்படும் திரைப்படங்களையும், ஒடிடி தளங்களால் உலகளவில் பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல முடிகிறது. அதே வேளையில் திரைப்படத்துறையின் படைப்பாளர்கள் தங்களது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவர விரும்புகிறார்கள்”, என்று மலையாள திரைப்படத் துறையின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திரு ஜி பி விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 20, 2021) “இந்திய திரைப்படத் தயாரிப்பில் மாறிவரும் சூழல்கள்என்ற தலைப்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற உரை நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இணையதள திரைப்படத் திரை தொடர்ந்து செயல்படும் என்று கூறிய அவர், “கொவிட்-19 பரவல் தொடங்கியது முதல், நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் இயன்ற அளவு வருமானத்தை ஈட்டுவதற்காக திரைப்படங்களை வெளியிடுவதற்கான அடிப்படைத் தளமாக ஓடிடி மாறியுள்ளது”, என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690343

******

(Release ID: 1690343)


(Release ID: 1690447) Visitor Counter : 195