தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சினிமா துறையில் தற்சார்பு இந்தியாவை கொண்டுவந்தவர் தாதா சாகேப் பால்கே: பேரன் திரு சந்திரசேகர் புசல்கர் பெருமிதம்

‘‘இந்திய சினிமா துறையில் தற்சார்பு இந்தியாவை கொண்டு வந்த தொலைநோக்கு பார்வையாளர்  தாதா சாகேப் பால்கே, என இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் அவரது பேரன்  திரு சந்திரசேகர் புசல்கர்  பெருமையுடன் கூறினார்.

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்கிறது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, அவருக்கு இந்த விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தாதா சாகேப் பால்கேவின் மகள் வழிப் பேரன்  திரு சந்திரசேகர் புசல்கர், தனது தாத்தா பற்றி பத்திரிகை தகவல் அலுவலத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேக் இன் இந்தியாவுக்கு பிரசாரம் செய்த தொலை நோக்கு பார்வையாளர் தாதா சாகேப் பால்கே. இந்திய சினிமா துறையில் தற்சார்பு இந்தியா இயக்கத்தை அவர் அப்போதே கொண்டு வந்தார்.  அவரது திரைப்படங்களில், அவர் உள்ளூர் கலைஞர்களைத்தான் எப்போதும் பயன்படுத்தினார்.  திரைப்பட படப்பிடிப்புக்கு உள்நாட்டு இடங்களை  தேர்வு செய்து, உள்நாட்டில் கிடைக்கும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தினார்.  அவரது தொலைநோக்கு மற்றும் தேசபக்தியால்தான், இந்திய திரைப்படம் இன்று உயர்ந்து நிற்கிறது.

இவ்வாறு  திரு சந்திரசேகர் புசல்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690048

**********************


(Release ID: 1690168)