தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரைப்படங்களை ரசிகர்கள் உண்மையாக உணர்வதற்கு ஒலி முக்கியம்; திரைப்படத்தின் காட்சிகளோடு ஒலி மற்றும் வசனம் சரியாக பொருந்த வேண்டும்
கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவில் பேசிய பேராசிரியர் மது அப்சரா, திரைப்படங்களை ரசிகர்கள் உண்மையாக உணர்வதற்கு ஒலி முக்கியம்; திரைப்படத்தின் காட்சிகளோடு ஒலி மற்றும் வசனம் சரியாக பொருந்த வேண்டும் என்று கூறினார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்கட்சி நிறுவனத்தின் ஒலிப்பதிவு மற்றும் வடிவமைப்பு துறையின் இணை பேராசிரியரான அவர், ஓடிடி தளம் மூலம் திரைப்பட ரசனை அமர்வில் ‘திரைப்படங்களில் ஒலி வடிவமைப்பு’ என்னும் தலைப்பில் பேசினார்.
“ஒலிக்கு, குறிப்பாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழலில் கேட்கும் சத்தங்களுக்கு, செவிமடுக்க வேண்டும். திரைப்படத்தை விவரிப்பதற்கு அவை உதவும்,” என்று அவர் கூறினார். ஒலிவாங்கியை பரிசோதிப்பதின் அவசியத்தை குறித்து பேசிய அவர், அனைத்து ஒலிகளையும் ஒன்றாக இணைத்து விட முடியாது என்றார். ஆனால், தேவைப்படும் இடங்களில் அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
**********************
(Release ID: 1690166)
Visitor Counter : 185