மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

நாட்டில் பறவை காய்ச்சல் தற்போதைய நிலவரம்

Posted On: 19 JAN 2021 6:16PM by PIB Chennai

இன்றைய நிலவரப்படி, ஐந்து மாநிலங்களில் பண்ணை பறவைகளிலும், பத்து மாநிலங்களில் காகம்/இடம்பெயர்ந்த/காட்டு பறவைகளிலும்  பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மேலும், கேரளாவில் உள்ள ஆலப்புழை மாவட்டத்திலும், மகாராஷ்டிராவில் உள்ள நாண்டெட் (சிகாஹரி மற்றும் தலாஹரி கிராமங்கள்), சத்தாரா (மராய் வாடி), லத்தூர் (தவங்கவுன்), நாக்பூர் (வரங்கா), கத்ரிசோலி (கத்ரிசோலி), மும்பை (கல்யாண், தானே) மற்றும் பீட் (வாராட்டி) ஆகிய மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

உத்தரப் பிரதேம் (அலிகஞ்ச், கேரி - காகம்) மற்றும் பஞ்சாபிலும் (ரூப்நகர்-பார் வாத்து) பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பர்பானி மாவட்டத்திலும், மும்பையிலுள்ள மத்திய பண்ணை வளர்ச்சி அமைப்பிலும் ஒழிப்புப் பணிகள் நிறைவடைந்து, தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிப்புகள் உள்ள இதர பகுதிக்ளுக்கு துரித நடவடிக்கை குழுக்கள் அனுப்பப்பட்டு, பண்ணைப் பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காகம்/இடம்பெயர்ந்த/காட்டு பறவைகள் பாதிக்கப்பட்ட இதர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690078

 

******************



(Release ID: 1690152) Visitor Counter : 99