பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில் 69வது வடகிழக்கு கவுன்சில் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JAN 2021 5:27PM by PIB Chennai

வடகிழக்கு கவுன்சிலின் 69வது கூட்டம், மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் 2021 ஜனவரி 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமை வகிக்கிறார். இதில், வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், வடகிழக்கு கவுன்சில் உறுப்பினர்களான, 8 வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் இதர உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்துக்கான தயார் நிலை குறித்து, மூத்த அதிகாரிகளுடன், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690046

-----

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1690097) வருகையாளர் எண்ணிக்கை : 154
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi