குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பழங்குடியினர் நல அமைச்சகத்துடன், கதர் கிராமப்புற தொழில்கள் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 19 JAN 2021 4:42PM by PIB Chennai

பழங்குடியின மாணவர்களுக்கு கதர் உடைகளை கொள்முதல் செய்யவும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக இணைந்து பணியாற்றவும், இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், மத்திய பழங்குடியினர் நல அமைச்சகமும், கதர் கிராமப்புற தொழில்கள் ஆணையமும் இன்று கையெழுத்திட்டன.

 

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி, பழங்குடியினர் நல அமைச்சகத்தால் நடத்தப்படும் ஏகலைவா பள்ளிகளின் மாணவர்களுக்காக, ரூ 14.77 கோடி மதிப்பிலான 6 லட்சம் மீட்டருக்கும் அதிகமான கதர் ஆடைகளை 2020-21-ஆம் ஆண்டில் பழங்குடியினர் நல அமைச்சகம் கொள்முதல் செய்யும் என்று கூறினார்.

திரு அர்ஜுன் முண்டா கூறுகையில், நாட்டிலுள்ள பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சிக்கு பொறுப்பான பழங்குடியினர் நல அமைச்சகத்தின் முகமையான தேசிய பட்டியல் பழங்குடியினர் நிதி வளர்ச்சி நிறுவனம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்படும் என்றார்.

பழங்குடியினரை பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியும், அவர்களுக்கான சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களுக்குப் பலனளிக்கும். பழங்குடியினர் நல அமைச்சகத்துடன் கதர் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் கூட்டிணைவானது, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் அதிக பழங்குடியினரை சென்றடைவதை உறுதி செய்யும்.

--------

 (Release ID: 1690094) Visitor Counter : 181