வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அறிவுசார் சொத்துரிமையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை
Posted On:
19 JAN 2021 4:04PM by PIB Chennai
அறிவுசார் சொத்துரிமையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே முதல் முறையாக இம்மாதம் 14ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தொழில்வளர்ச்சி, உள்நாட்டு வர்த்தக துறை(டிபிஐஐடி) அதிகாரிகள் இடையே காணொலிக் காட்சி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உறவையும், அறிவுசார் சொத்துரிமை துறையில் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம்.
டிபிஐஐடி இணைச் செயலாளர் திரு ரவீந்திர், ஐரோப்பிய ஆணையத்தின் முதலீடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை பிரிவின் தலைவர் திரு கர்லோ பெட்டிநாட்டோ ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த திரு. ரவீந்தர் எடுத்துரைத்தார். தொடக்க நிறுவனங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா மேற்கொண்ட பல நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பாராட்டினர். ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் செயல்பாடுகள், அறிவுசார் சொத்துரிமைகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்து திரு கர்லோ எடுத்து கூறினார்.
தகவல் பரிமாற்றத்துக்குப்பின், தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப, டிஜிட்டல் சந்தை காப்புரிமையில் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகள் எடுத்து கூறினர்.
மேலும் தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690008
----
(Release ID: 1690076)
Visitor Counter : 237