வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வாரணாசி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வேளாண் பொருட்களை நேரடி விமானங்களில் ஏற்றுமதி: அபேடாவின் முன்முயற்சி

Posted On: 19 JAN 2021 4:05PM by PIB Chennai

பச்சை பட்டாணி, உருண்டையான பச்சை கத்தரிக்காய் ஆகிய  காய்கறிகள் இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த காய்கறிகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபேடாவின் தலைவர், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். பச்சைப் பட்டாணி, உருண்டையான பச்சை கத்தரிக்காய் உள்ளிட்ட 1000 கிலோ எடையிலான காய்கறிகள் அனுப்பப்பட்டன.

வாரணாசி விமான நிலையத்திலிருந்து நேரடி ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளதன் வாயிலாக வாரணாசி, அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து புவிசார் குறியீடு பொருட்கள் உட்பட ஏராளமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது.

 

புவிசார் பொருட்களுக்கும், உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதைக் கருத்தில் கொண்டு தனித்துவமானதும், சர்வதேச சந்தையில் ஊக்குவிக்கும் தகுதி பெற்றதும், புவிசார் குறியீடு சான்றிதழைப் பெறவிருக்கும் ராம்நகர் பண்டா என்று அழைக்கப்படும் உருண்டையான பச்சை கத்தரிக்காய் விளையும் பகுதிகளுக்கு அபேடா அமைப்பின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து நேரில் சென்று பார்வையிட்டார்.

வாரணாசி விமான நிலையத்தில் நேரடி ஏற்றுமதிக்கான வசதிகள் இல்லாத காரணத்தால், லக்னோ அல்லது தில்லியிலிருந்து ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்தனர்.

பலதரப்பட்ட முகமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வாயிலாக ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களையும் வழங்கும் வசதிகள் வாரணாசியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690010

------



(Release ID: 1690072) Visitor Counter : 172