பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

குப்பையிலிருந்து உயிரி எரிவாயு உற்பத்தி: இந்தியன் ஆயில், தில்லி நகராட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 19 JAN 2021 3:22PM by PIB Chennai

புதுதில்லி நரேலா பகுதியில் ராணிகேரா குப்பை கிடங்கில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தில்லி நகராட்சி இடையே இன்று கையெழுத்தானது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்த ஒப்பந்தப்படி  புதுதில்லி நரேலா பகுதியில் உள்ள ராணிகேரா என்ற இடத்தில் குப்பையிலிருந்து, உயிரி எரிவாயு தயாரிக்கும் ஒருங்கிணைந்த ஆலை அமைப்பதற்கு தேவையான  வசதிகளை தில்லி மாநகராட்சிக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் செய்து கொடுக்கும். 

இந்த ஆலை, திடக்கழிவு, இயற்கை கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கும். பிளாஸ்டிக் பொருட்களை சுத்திகரிப்பு செய்யும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ‘‘இந்த மைல்கல் திட்டம் தொடங்கப்படுவது, பல வழிகளில் எரிபொருள் உற்பத்தி செய்யவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், இதர தேசிய இலக்குகளை அடையவும் உதவும்’’ என்றார்.

மேலும் விரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689991

**



(Release ID: 1690039) Visitor Counter : 142