தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சர்ஃபரோஷ் 2 திரைப்படம் சிஆர்பிஎப் வீரர்களுக்கு அர்ப்பணிப்பு: பிரபல இயக்குனர் திரு ஜான் மேத்யூ மட்தான்

எனது திரைப்படங்களுக்கான கருவைத் தேடி நான் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன்”.

எந்த ஒரு திரைப்பட இயக்குநரும் சமூகவியல், அரசியலின்  கூறுகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்”.

ஒரு எழுத்தாளரோ அல்லது இயக்குநரோ, சமூகத்தைப் பற்றிய புரிதலுடன் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து. யாரையும் புண்படுத்தாமல் நீங்கள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்”.

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்திய பனோரமா தேர்வுக் குழுத் தலைவரும், தேசிய விருது பெற்ற திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநருமான திரு ஜான் மேத்யூ மட்தான் இதனைத் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் ஒரு பகுதியாக திரைப்பட ஊடகவியலாளர் திரு ஃபரிதூன் ஷாரியாருடன்உங்களிடம் இருக்கிறதா?” என்ற தலைப்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது திரு மட்தான் இவ்வாறு கூறினார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான சார்ஃபரோஷ் என்னும் திரைப்படத்திற்கு தேசிய விருதைப் பெற்ற அவர், இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கியதுடன், கதை, திரைக்கதையையும் எழுதினார்.

 

சார்ஃபரோஷ் 2, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைப் பற்றிய திரைப்படம் என்று அவர் கூறினார். “பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேயும் இந்தியாவின் பாதுகாப்பு எவ்வாறு வலுவாக செயல்படுகிறது என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது.” இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்குத் தாம் இந்தத் திரைப்படத்தை அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689971

------


(Release ID: 1690029)