நிதி அமைச்சகம்
மின்சக்தித் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மத்தியப் பிரதேசம் முன்னிலை
Posted On:
19 JAN 2021 3:31PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்துள்ள மின்சக்தித் துறை சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2020 டிசம்பரிலிருந்து மின்சார மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தும் செயல்முறையை ஒரு மாவட்டத்தில் அம்மாநிலம் தொடங்கியுள்ளது. மின்சக்தித் துறையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சீர்திருத்தங்களில் ஒன்றை மத்தியப் பிரதேசம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இதன் மூலம், மாநிலத்தின் மொத்த உள்உற்பத்தியில் 0.15 சதவீதம் அளவுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான தகுதியை அம்மாநிலம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, திறந்தவெளி சந்தைகளில் இருந்து ரூ.1,423 கோடியை கடனாக பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்திற்கு செலவினங்கள் துறை வழங்கியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் மாநில அரசுக்கு மிகவும் தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் கிடைத்துள்ளன.
செலவினங்கள் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மின்சக்தித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு மொத்த மாநில உள் உற்பத்தியில் 0.25 சதவீதம் வரை கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689996
-----
(Release ID: 1689996)
(Release ID: 1690027)