தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஆட்டிஸம் குழந்தைகளின் குறும்படம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஆட்டிஸம் (மனவளர்ச்சி குன்றிய) குழந்தைகள் பற்றி எடுக்கப்பட்டஇன் அவர் வோர்ல்ட் ஆவணப்படம் பற்றி இயக்குனரும், தயாரிப்பாளருமான திரு ஸ்ரீதர் விளக்கினார்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்கிறது. இங்கு கடந்த 18ம் தேதி அன்று, ஆட்டிஸம் குழந்தைகள் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம்  ‘இன் அவர் வோர்ல்ட் திரையிடப்பட்டது. இது குறித்து அதன் இயக்குனர்  இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இப்போது நாம் வாழும் முறைஇரண்டு வெவ்வேறு உலகங்கள் இருப்பதைக் குறிக்கிறது. ஒன்று ‘‘அவர்களுக்கு’’ மற்றொன்று ‘‘நமக்கு.  அவர்கள், நம்மால் தவறாக புரிந்து கொள்ப்படுகிறார்கள். அன்புடன் புரிந்து கொள்ள வேண்டிய உலகத்தை பார்க்க இந்தப் படம் வழி ஏற்படுத்தியுள்ளதுஇதன் மூலம் அவர்களை,  அன்புடன், பரஸ்பர மரியாதையுடன் வாழும் ஒரே உலகத்தில் ஒன்றிணைக்க முடியும்.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் அனுபவிக்கும் வலியை அறிந்து கொள்ளவும், உணரவும், எங்கள் படம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இந்தக் குழந்தைகள் அன்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால், மக்களுடன் தொடர்பு கொள்ள அவர்கள் சிரமபடுகின்றனர்அதனால் அவர்களின் தூதுவராக நான் இருக்கு வேண்டும் என நினைத்து இந்தப் படத்தை எடுத்தேன். இன்று இந்த அங்கீகாரம் கிடைத்ததற்காக, இந்த படத்தில் நடித்த 3 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், இத்தகவலை உலகுக்கு சொல்ல அனுமதித்த அவர்களின் பெற்றோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு  இயக்குனர் திரு. ஸ்ரீதர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்குhttps://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689967

                                                                       ----


(Release ID: 1690024) Visitor Counter : 209