பாதுகாப்பு அமைச்சகம்

இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தி ‘ரக்‌ஷிதா’

Posted On: 18 JAN 2021 6:19PM by PIB Chennai

தில்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியலுக்கான நிறுவனம், இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தியான ரக்‌ஷிதாவைமத்திய ரிசர்வ் காவல் படைக்கு புது தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் வழங்கியது.

தலைசிறந்த விஞ்ஞானியும், டிஆர்டிஓ தலைமை இயக்குநருமான டாக்டர் ஏ கே சிங், ரக்‌ஷிதாவின் மாதிரியை மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் டாக்டர் ஏ பி மகேஷ்வரியிடம் வழங்கினார். இதையடுத்து 21 இருசக்கர அவசர சிகிச்சை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பு படைகளும், அவசரகால மருத்துவ சேவை வழங்குபவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைவதற்கு இந்த ஊர்திகள் உதவும். குறைந்த அளவு பிரச்சினை உள்ள பகுதிகளில் இருந்து காயம்பட்டவர்களை மீட்பதற்கும், உயிர்காக்கும் உதவியை வழங்குவதற்கும் இவை வழிவகுக்கும். நெரிசலான தெருக்களையும், தொலைதூர இடங்களையும் இவற்றின் மூலம் சென்றடைவது எளிதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689731

 

**********************(Release ID: 1689799) Visitor Counter : 218