பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் பாரதிய மஸ்தூர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted On: 18 JAN 2021 5:44PM by PIB Chennai

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய பிரதிநிதிகள் இன்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, பல்வேறு துறைசார் பணிகள் குறித்த விஷயங்களை ஆலோசித்தனர்.

பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்கம் (பிஎம்பிஎஸ்), சர்க்காரி கர்மாச்சாரி ராஷ்ட்ரிய பரிசங்கம், சிவிலியன் வகுப்பு-1 குழு அதிகாரிகளின் சங்கம், இந்திய ஆய்வு அமைப்பின் பிரிவு பி அதிகாரிகளின் சங்கம் போன்றவைகளின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பணியாளர்கள் தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்காக அவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கத்துடன்ஏராளமான முன்முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அதேவேளையில் பல்வேறு தருணங்களில் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்படும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பம் சார்ந்த முறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கர்மயோகி இயக்கம் என்னும் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு, வரிசைப்பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உரிய காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படுவது தொடர்பாக பணியாளர்-பயிற்சித்துறையின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், எனினும் பலதரப்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது மிகப்பெரும் சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689709

**********************



(Release ID: 1689782) Visitor Counter : 123