பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் தூய்மை இருவார நிகழ்ச்சிகள்
प्रविष्टि तिथि:
18 JAN 2021 4:32PM by PIB Chennai
தேசிய மாணவர் படை ஏற்பாடு செய்திருந்த தூய்மை இருவார நிகழ்ச்சிகளை தில்லி இந்தியா கேட்டில் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் இன்று தொடங்கி வைத்தார். “தூய்மையான இந்தியா, பசுமையான இந்தியா - இதுதான் என் கனவு இந்தியா” என்பது இதன் கருப்பொருளாகும்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அஜய் குமார், ஒரே பாரதம் உன்னத பாரதம், சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாம்கள், தலைமைப் பண்பும் ஆளுமை வளர்ச்சியும், தூய்மைப் பிரச்சாரம் ஆகிய திட்டங்களின் வாயிலாக தேசிய கட்டமைப்பில் உலகின் மிகப்பெரும் சீருடை இளைஞர்கள் அமைப்பான தேசிய மாணவர் படை பெரும் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். “தேசிய மாணவர் படையின் பங்களிப்பு” பயிற்சித் திட்டத்தின் வாயிலாக முன்கள வீரர்களாக இந்த அமைப்பின் மாணவர்கள் செயல்பட்டு, பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
தேசிய தூய்மை இருவார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் வாயிலாக பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிக முக்கியப் பணியில் தேசிய மாணவர் படையினர் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளைப் பாராட்டிய டாக்டர் அஜய் குமார், இதுபோன்ற பிரச்சாரங்களால் நாட்டை சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689692
**********************
(रिलीज़ आईडी: 1689744)
आगंतुक पटल : 190