அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2020-ம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் சிஎஸ்ஐஆர்-இன் முக்கிய மைல் கற்கள்

Posted On: 18 JAN 2021 9:52AM by PIB Chennai

2020-ம் ஆண்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சிஎஸ்ஐஆர் அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய பணிகள்:

•        சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின்(என்டிஆர்எப்)  4வது பட்டாலியனில், 10 படுக்கைகள் கொண்ட, பிற இடங்களுக்கு எடுத்து செல்லும் வகையிலான  மருத்துவமனையும், தனிமை மையமும் தொடங்கப்பட்டது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்இந்த மருத்துவமனை கூடாரங்கள் 20 ஆண்டுகள் வரை உழைக்க கூடிய வகையில் அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்டன.

* காசியாபாத்தில் உள்ள என்டிஆர்எப் மையத்திலும், இதேபோன்ற 10 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது

அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்)  - மத்திய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு, மனித உடல்களில் பொருத்தக்கூடிய பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

* சிஎஸ்ஐஆர் உருவாக்கிய கொவிட்-19 தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் தொகுப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.          

* சிஎஸ்ஐஆர் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) கொவிட்-19 தொற்றுக்கான மருந்து கண்டுபிடிப்புப் போட்டியை தொடங்கியது.

* சிஎஸ்ஐஆர் - மத்திய சாலை ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர் -சிஆர்ஆர்ஐ) சமூக இடைவெளியுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கியது

* கொவிட் 19க்கான மருத்துவப் பரிசோதனைகளை இணைந்து மேற்கொள்வதற்காக இணைய முனையம் தொடங்கப்பட்டது. இந்தத் தளத்தை கீழ்க்கண்ட இணைப்புகளில் பார்க்கலாம். https://www.iiim.res.in/cured/   or  http://db.iiim.res.in/ct/index.php

* வெளிநாட்டு வாழ் இந்தியர் கல்வி மற்றும் அறிவியல்  அமைப்பின்(பிரபாஸ்) இணையதளம் தொடங்கப்பட்டது.

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, சிக்கனமான டை மெத்தில் ஈதர்(டிஎம்இ) எரிபொருள் பிரிவுஆதித்தி உர்ஜா சன்ச்தொடங்கப்பட்டது.

* கொவிட்-19 மேலாண்மைக்கான சிகிச்சையை  அடையாளம் காண, சிஎஸ்ஐஆர்  மற்றும் மிலன் ஆகியவை கூட்டாக செயல்படுவதை அறிவித்தது

* சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி, சென்னை, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், மின் இணைப்பை உடனடியாக வழங்குவதற்கான  கருவிகளை உருவாக்கியது.

* இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா- 2020, 5 கின்னஸ் சாதனைகளைப் படைத்தது. இதில் 1.3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

* பாரதிய நிர்தேசக் டிராவிய வெளியிடப்பட்டது.

* உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தகவல் பரிமாற்றத்தில் கூட்டாக செயல்பட சிஎஸ்ஐஆர் மற்றம் ஃபசாய் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

* கொவிட் பரிசோதனைக்காக எளிமையான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவியை ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் அமைப்பின் சிசிஎம்பி பரிசோதனைக் கூடம் உருவாக்கியது.

* ஆரோக்யபாத்- சுகாதார மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது.

விநியோகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புக்காக விவசாயிகளை இணைக்க கிசா சபா செயலியை சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ உருவாக்கியது.

* அடுத்த தலைமுறைக்கான எரிசக்தி சேமிப்பு தீர்வுகளுக்கான புத்தாக்க மையத்தை சிஎஸ்ஐஆர் தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689595

*******

 (Release ID: 1689595)



(Release ID: 1689670) Visitor Counter : 159