ரெயில்வே அமைச்சகம்

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ரயில் சேவைகள், திட்டங்கள் குறித்த விவரம்

Posted On: 17 JAN 2021 4:37PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கெவாடியாவிற்கு 8 புதிய ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் தபோய் – சந்தோத் அகல ரயில் பாதை (18 கி.மீ), சந்தோத் -கெவாடியா புதிய அகல ரயில் பாதை (32 கி.மீ), பிரதாப்நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம் (80 கி.மீ), தபோய் சந்திப்பு, சந்தோத் மற்றும் கெவாடியாவில் புதிய ரயில் நிலைய கட்டிடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

•     இந்தத் திட்டத்திற்கு ரூ. 811 கோடி ஒதுக்கப்பட்டது.

•     ரயில்களை 100% மின்மயமாக்கும் ரயில்வே அமைச்சகத்தின் கொள்கையின் அடிப்படையில் பிரதாப்நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மையான, பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்து வழங்கப்படுவதுடன், கரியமிலத்தடமும் குறைக்கப்படும்.

•     நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து உலகின் உயரிய ‘ஒற்றுமை சிலைக்கு' தடையற்ற ரயில் போக்குவரத்து வழங்கப்படும்.

•     உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

•     புதிய வேலை வாய்ப்புகளும், வர்த்தக வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

•     இந்திய பசுமைக் கட்டிட மன்றத்திலிருந்து பசுமை கட்டிடத்திற்கான சான்றிதழைப்பெறும் நாட்டின் முதல் ரயில் நிலையமாக‌ கெவாடியா ரயில் நிலையம் விளங்குகிறது.

•     சென்னை உட்பட (சென்னை - கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09119/20)) பல்வேறு பகுதிகளிலிருந்து கெவாடியாவிற்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

•     ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், வான் பகுதியை பார்வையிடும் வகையில்  கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய ‘விஸ்தா – டூம் சுற்றுலா பெட்டிகள்’ இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689377

------(Release ID: 1689463) Visitor Counter : 31