அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வெப்பத்தினால் விளைச்சல் பாதிப்படையாத கோதுமை வகையைக் கண்டறியும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி தீவிரம்
प्रविष्टि तिथि:
17 JAN 2021 12:24PM by PIB Chennai
வெப்பத்தினால் விளைச்சல் பாதிப்படையாத கோதுமை வகை நமக்கு வெகு விரைவில் கிடைக்கவிருக்கின்றது.
வெப்பம் ஏற்படுவதால் கோதுமையின் தரம் பாதிக்கப்படுவதுடன், விளைச்சலும் வெகுவாகக் குறைகிறது. இந்த சவாலை எதிர் கொள்வதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பயர் உதவித்தொகையைப் பெற்ற டாக்டர் விஜய் கலோத் வெப்பத்தைத் தாங்கக்கூடியதுடன், கூடுதல் விளைச்சலை ஈட்டக்கூடிய கோதுமை வகைகளை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
பாலம்பூரின் இமாலய உயிரிவள தொழில்நுட்பக் கழகத்தின் உயிரித் தொழில்நுட்பப் பிரிவில் ஆசிரியராகப் பணிபுரியும் டாக்டர் விஜய், கோதுமையில் உள்ள வெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் வெப்ப உணர்வுடைய மரபு வகைகளின் மரபணு அமைப்புகளை பல்வேறு கட்டங்களில் கண்டறிவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689291
-----
(रिलीज़ आईडी: 1689431)
आगंतुक पटल : 222