தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் துவக்க திரைப்படம்: திரு தாமஸ் வின்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்'

Posted On: 16 JAN 2021 7:00PM by PIB Chennai

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா, டேனிஷ் திரைப்பட இயக்குனர் திரு தாமஸ் வின்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்' திரைப்படத்துடன் கோவாவில் இன்று துவங்குகிறது. இந்தத் திரைப்படம் டென்மார்க் நாட்டிலிருந்து 93-வது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் துவக்க விழாவில் திரையிடப்பட்டது. தமது திரைப்படம் திருவிழாவின் துவக்கமாக திரையிடப்படுவதற்கு திரு தாமஸ் வின்டர்பெர்க் காணொலி செய்தி வாயிலாக தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689137

-----(Release ID: 1689205) Visitor Counter : 12