வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாடு: 70-க்கும் மேற்பட்ட சர்வதேச நிதியங்கள் வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்பு

Posted On: 16 JAN 2021 11:01AM by PIB Chennai

பிராரம்ப், ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாடு முதல் நாளன்று (ஜனவரி 15, 2021) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, சர்வதேச நிதியங்களுடன் வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து இயங்கும் சர்வதேச நிதியங்கள் உள்ளிட்ட 70 முதலீட்டு நிதியங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் திரு திரு பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபாத்ரா, இணைச் செயலாளர் திரு அனில் அக்ரவால், முக்கிய இந்திய கட்டுப்பாட்டாளர்கள், கொள்கை தயாரிப்பாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டு நிதியங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சர்வதேச நிதியங்களின் பிரச்சினைகளை ஆலோசிப்பது, தற்போதைய இந்திய ஸ்டார்ட்அப்- முதலீட்டு நிறுவனங்களுக்கான சூழலியல் குறித்த வளர்ச்சி அறிக்கையை பகிர்ந்து கொள்வது, இந்தியாவில் முதலீடு செய்து அதன் வாயிலாக முதலீட்டு நிதியங்களிடையே எளிமையான வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து ஊக்குவிப்பது ஆகியவை இந்த வட்டமேசை கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689011

-----

 

 


(Release ID: 1689182) Visitor Counter : 180