குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கோவாவில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார்

Posted On: 16 JAN 2021 6:23PM by PIB Chennai

கோவாவில் பனாஜியில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் போன்டாவில் உள்ள மாத்ருச்சாயா ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு தமது மனைவி திருமதி உஷா நாயுடுவுடன் பார்வையிட்டார்.

அவர்களது மகளும் சுவர்ண பாரத அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான திருமதி தீபா வெங்கட் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

திரு நாயுடு மற்றும் திருமதி உஷா நாயுடுவுக்கு மாத்ருச்சாயா இல்லம் சுற்றிக்காட்டப்பட்டு, ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நலனுக்காக அது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

மாத்ருச்சாயா அறக்கட்டளை உறுப்பினர்களின் சேவைகளை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், சேவையின் மூலமே ஒருவருக்கு திருப்தி கிடைக்கும் என்று கூறினார்.

சுவர்ண பாரத அறக்கட்டளையுடனான தமது உறவை குறித்து பேசிய அவர், அங்கிருக்கும் குழந்தைகளுடன் உரையாடும் போதெல்லாம் தனக்கு உத்வேகம் கிடைப்பதாகக் கூறினார். பெருநிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் அரசு சாரா சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கியதற்காக கொவிட் வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தன்னலமில்லாத சேவையை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689124

------


(Release ID: 1689157) Visitor Counter : 113