குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது ரூ 49 கோடி மதிப்புள்ள பொருட்களை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்திடமிருந்து வாங்கும் உத்தரவை ரயில்வே வழங்கியது

Posted On: 16 JAN 2021 3:05PM by PIB Chennai

காதி கைவினை கலைஞர்களுக்கு மிகப்பெரும் ஊக்கத்தை வழங்கும் விதமாக, கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது ரூ 49 கோடி மதிப்புள்ள பொருட்களை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்திடமிருந்து வாங்கும் உத்தரவை ரயில்வே வழங்கியது

கொவிட்-19 பொதுமுடக்கத்தின் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த சமயத்தில் இந்திய ரயில்வேயின் இந்த முடிவு நாடு முழுவதுமுள்ள 82 காதி நிறுவனங்களில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு நேரடியாக பலனளித்தது.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ 8.48 கோடி மதிப்பிலான காதி பொருட்களை ரயில்வே கொள்முதல் செய்தது. இதன் மூலம், கொவிட்-19-இன் கடினமான காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பும், வருமானமும் காதி கைவினை கலைஞர்களுக்கு கிடைத்தது.

மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் காதி கைவினை கலைஞர்களுக்கு ஆதரவளித்ததற்காக ரயில்வே அமைச்சர் திரு பியுஷ் கோயலுக்கு காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமர் சக்சேனா நன்றி தெரிவித்தார்.

“கொவிட்டின் போது, கைவினை கலைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த மிகப்பெரும் சவாலை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் எதிர்கொண்டது. ரயில்வேயின் கொள்முதல் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது,” என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689054

----



(Release ID: 1689146) Visitor Counter : 192