பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மத்திய தத்தெடுத்தல் வள ஆணையம் ஆறாவது ஆண்டு விழாவை கொண்டாடியது

Posted On: 15 JAN 2021 6:41PM by PIB Chennai

மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் ஆறாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரும், மத்திய தத்தெடுத்தல் வள ஆணைய வழிகாட்டுதல் குழுவின் தலைவருமான திரு ராம் மோகன் மிஷ்ரா காணொலி மூலம் அலுவலர்களிடையே உரையாடினார்.

நாட்டில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான வசதிகளை வழங்குவதற்காக சட்டப்பூர்வ அமைப்பு என்னும் அந்தஸ்து மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்திற்கு 2016 ஜனவரி 16 அன்று இந்திய அரசால் வழங்கப்பட்டது.

கொவிட்-19 காரணத்தால் காணொலி மூலம் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் ஆறாவது ஆண்டு விழா நடைபெற்றது. சவலான காலகட்டத்திலும், கடந்த வருடங்களை விட அதிகமான தத்தெடுத்தல்கள் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் மூலம் நடந்துள்ளன.

2019-20-ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் 849 மற்றும் 885 அக இருந்த தத்தெடுத்தல்களின் எண்ணிக்கை, 2020-21-ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் முறையே 966 மற்றும் 983 ஆக இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688851

-----


(Release ID: 1688951) Visitor Counter : 175