புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

கூரைகள் மீதும் நிறுவப்படும் சூரியசக்தி குறித்த அறிவுரை

Posted On: 15 JAN 2021 5:42PM by PIB Chennai

வீடுகளின் கூரைகள் மீது சூரிய சக்தி உபகரணங்களை நிறுவி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பதி செய்வதற்காக, தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதும் நிறுவப்படும் சூரியசக்தி திட்டத்தை (கட்டம்-II) இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதல் 3 கிலோவாட்டுக்கு 40 சதவீத மானியத்தையும், 3 கிலோவாட்டுக்கு மேல் 10 கிலோவாட் வரை 20 சதவீத மானியத்தையும் அமைச்சகம் வழங்குகிறது. உள்ளூர் மின் விநியோக நிறுவனங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கூரைகள் மீதும் நிறுவப்படும் சூரியசக்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள்/வர்த்தகர்கள் தாங்கள் தான் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஒப்புதல் பெற்ற விற்பனையாளர்கள் என்று கூறி சூரிய சக்தி உபகரணங்களை நிறுவி வருவதாக அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மின் விநியோக நிறுவனங்களால் மட்டுமே இத்திட்டம் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ள அமைச்சகம், எந்த வர்த்தகரும் இதற்காக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், இத்திட்டத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை விட அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மின் விநியோக நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, 1800-180-3333 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது  https://solarrooftop.gov.in/grid_others/discomPortalLinks என்னும் இணைய முகவரியை பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688826

-----



(Release ID: 1688942) Visitor Counter : 203