புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

இந்திய இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பு 2021

Posted On: 14 JAN 2021 7:01PM by PIB Chennai

இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பு என்னும் திட்டத்தை 2017-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தொடங்கியது. சுற்றுப்புற சூழல் கணக்கிடுதலில், குறிப்பாக சூழலியல் கணக்கிடுதலில், நாடுகளுக்கு உள்ள அறிவை மேம்படுத்தவும், அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் பல்லுயிராக்கல் மாநாட்டு செயலகம் ஆகியவற்றால் இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிகாவில் இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பு செயல்படுத்தப்படுகிறது.

இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பின் இந்திய கிளையின் மூன்று நேரடி அமர்வுகள் ஜனவரி 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைறுகின்றன.

இன்று நடைபெற்ற முதல் அமர்வில், இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளில் இந்தியா மற்றும் சர்வதேச முகமைகள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் இதில் கலந்து கொண்டனர். இதன் பதிவுகளை http://ncavesindiaforum.in என்னும் முகவரியில் காணலாம்.

2021 ஜனவரி 21 அன்று நடைபெற இருக்கும் இரண்டாம் நாள் அமர்வில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் திருமிகு இங்கெர் ஆண்டர்சன் மற்றும் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688608

-------



(Release ID: 1688687) Visitor Counter : 211