வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பெங்களூரு மெட்ரோவின் இரண்டாவது கட்ட சேவைகள் தொடக்கம்

प्रविष्टि तिथि: 14 JAN 2021 6:14PM by PIB Chennai

நம்ம மெட்ரோ’-வின் இரண்டாம் கட்டத்தின் கீழ் எலசென்னஹல்லியில் இருந்து சில்க் இன்ஸ்டிட்யூட் வரையிலான 6-கி.மீ. நீள தெற்கு வழித்தடத்தில் ரயில் சேவைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா மற்றும் கர்நாடக முதல்வர் திரு பி எஸ் எடியூரப்பா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

பெங்களூருவில் விரைவான மற்றும் திறன்மிகு போக்குவரத்தை உருவாக்குவதற்கான பெங்களூரு மிஷன் 2020-இன் இலக்குகளை எட்டுவதில் இன்றைய மெட்ரோ விரிவாக்க வழித்தடம் மற்றும் நடை மேம்பாலங்களின் திறப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

பெங்களூரு மெட்ரோவின் இரண்டாவது கட்டம் 74 கி.மீ. நீளத்தில் 62 நிலையங்களோடு, ஒன்றாம் கட்டத்தின் ஊதா மற்றும் பச்சை வழித்தடங்களின் நீட்சியாக செயல்படும். ரூ 30,696 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1688594

 

------ 


(रिलीज़ आईडी: 1688686) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Kannada