வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிறந்த வேளாண் நடைமுறைகள், பதப்படுத்துதல் மற்றும் இசப்கோல் மதிப்புக்கூட்டல் குறித்த இணைய கருத்தரங்கை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நடத்தியது

Posted On: 14 JAN 2021 4:47PM by PIB Chennai

தென்னிந்திய உயிரி தொழில்நட்ப மையம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை-தெற்காசிய உயிரி தொழில்நுட்ப மைய உயிரி தொழில்நுட்ப வேளாண் மையம், உயிரி தொழில்நுட்பத் துறை,  இந்திய வேளாண் தொழில்நுட்ப குழு-மருத்துவ மற்றும் வாசனை செடிகள் ஆராய்ச்சி இயக்குநரகம், வேளாண் துறை, மற்றும் ராஜஸ்தான் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ராஜஸ்தானில் உள்ள இசப்கோல் ஏற்றுமதியாளர்களின் விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் விதமாக சிறந்த வேளாண் நடைமுறைகள், பதப்படுத்துதல் மற்றும் இசப்கோல் மதிப்புக்கூட்டல் குறித்த இணைய கருத்தரங்கை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நடத்தியது.

துவக்க உரையாற்றிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அங்கமுத்து, உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடிய பிரத்தியேக பொருள் இசப்கோல் என்றார். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இதற்கான தேவை அதிகமாக உள்ளதாக அவர் கூறினார். பிசிலியம் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்து அவர் உரையாற்றினார்.

ராஜஸ்தான் அரசின் வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆணையர் டாக்டர் ஓம் பிரகாஷ், இசப்கோல் எளிதாக பாதிப்படையக் கூடிய விளைபொருள் என்றும் பனி அல்லது மழைக்கு பாதிப்படைந்து விடும் என்றும் கூறினார்.

கடுமையான பருவ நிலைகளை சமாளிக்கக்கூடிய இசப்கோல் வகைகளை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் அதிக விளைச்சல் ஏற்பட்டு அதிக  அளவில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக்

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688562

------



(Release ID: 1688632) Visitor Counter : 225