எரிசக்தி அமைச்சகம்

பிஎஃப்சி-யின் ரூ 5,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களின் வெளியீடு - 2021 ஜனவரி 15 தொடங்கும்

प्रविष्टि तिथि: 14 JAN 2021 1:22PM by PIB Chennai

மின்சாரத்துறையில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தனது பாதுகாப்பான, திரும்பப் பெறக் கூடிய ரூ 5,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களின் பொது வெளியீட்டை 2021 ஜனவரி 15 அன்று தொடங்கும்.

அடிப்படை வெளியீட்டின் அளவு ரூ.500 கோடி ஆகவும், கடன் பாத்திரங்களுக்கான தேவை அவற்றின் வெளியீட்டு அளவை விட அதிகமாக இருப்பின், ரூ.10,000 கோடிக்கு மிகாமல் ரூ. 4,500 கோடி வரை அதை அனுமதிக்கவும் உரிமை உள்ளது.

மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் மதிப்பு தலா ஆயிரம் ரூபாய் ஆகும். முதல் தொகுதியின் வெளியீடு 2021 ஜனவரி 29 அன்று முடிவடையும். ஆனால், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழு அல்லது இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முடிவின்படி முன்னதாகவே கூட நிறைவடையும் வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688491

-----


(रिलीज़ आईडी: 1688556) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi