விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகள் நிறைவு: மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் ஆலோசனை
Posted On:
13 JAN 2021 5:50PM by PIB Chennai
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் 5 ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், அப்போதுதான் விவசாயிகள் பலர் இத்திட்டத்தின் பயன்களைப் பெற முடியும் என அவர் கூறினார். இத்திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக மாநில அரசுகள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
2019ம் ஆண்டில் ஆந்திரா, கர்நாடகாவில் ஏற்பட்ட வறட்சி, ஹரியானாவில் ஏற்பட்ட சூறாவளி, ராஜஸ்தானில் ஏற்பட்ட வெட்டுக்கிளி தாக்குதல் போன்ற சம்பவத்தின் போது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்ற உதாரணங்களை அவர் எடுத்து கூறினார்.
தடுக்கமுடியாத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புக்கு, இந்த பயிர் காப்பீட்டுத் திட்டம், பாதுகாப்பு அளிப்பதால், இது ஒரு மைல் கல் என திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இது வரை விவசாயிகளுக்கு ரூ.90,000 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 முடக்க காலத்திலும், இத்திட்டம் முழுமையாக செயல்பட்டது. 69.70 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.8741.3 கோடி வழங்கப்பட்டது பாரட்டத்தக்கது. இந்தக் கூட்டத்தில் மாநில அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், காப்பீடு நிறுவன அதிகாரிகள் என 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688298
------
(Release ID: 1688353)
Visitor Counter : 180