குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மகர சங்கராந்தி, பொங்கலை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 13 JAN 2021 4:45PM by PIB Chennai

மகர சங்கராந்தி, பொங்கலை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித நாளான மகர சங்கராந்தி மற்றும் பொங்கலை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உத்தராயன், சூரியன் வட திசை நோக்கி நகர்வதின் தொடக்கம் மகரசங்கராந்தியைக் குறிக்கிறது.  நாடு முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் கொண்டாடப்படும் இந்த அறுவடைப் பண்டிகை, இந்தியர்களின் கலாச்சார ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது.

நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமான கிராமங்களில் நமது உறவுகளை நினைவு கூர்ந்து, மீண்டும் காண்பதற்கான ஓர் தருணமாகவும் இது அமைகிறது.

இந்த பண்டிகைக்காலம் உங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நமது நாட்டிற்கு இணைந்த பலத்தையும், வரும் மாதங்களின் இனிய தருணங்களுக்கான புனித தொடக்கமாகவும் அமையட்டும்.இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688275

-------

(Release ID 1688275)(Release ID: 1688345) Visitor Counter : 13