சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முதல் சிவப்பு நாடா வினாடி-வினா இறுதிப் போட்டி: டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
Posted On:
12 JAN 2021 6:39PM by PIB Chennai
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகமும் இணைந்து நடத்தும் முதல் சிவப்பு நாடா வினாடி வினா கிராண்ட் இறுதிப் போட்டியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த வினாடி வினாப் போட்டியை மாவட்ட, மாநில, மண்டல அளவில் நடத்தி, நாடு முழுவதும் 5,000 கல்லூரிகளை பங்கு பெறச் செய்வதற்காக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளை நான் பாராட்டுகிறேன். வினாடி வினா இளைஞர்களிடையே அறிவை வளர்க்கும் மிகச்சிறந்த முறை. புதிய விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வத்தைத் தூண்ட இது உதவும்.
50,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், வளரிளம் பருவ கல்வித் திட்டத்தை 2005ம் ஆண்டு முதல் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு என்சிஇஆர்டி-யுடன் இணைந்து அமல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவர்களை சென்றடைய 12,500 சிவப்பு நாடா மன்றங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் அமைத்துள்ளது. இந்தத் திட்டம் எச்.ஐ.வி தடுப்பு, பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சை, தாக்கத்தைக் குறைத்தல், களங்கம் குறைத்தல், தன்னார்வ இரத்த தானத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு விரிவான ஊக்குவிப்பு மற்றும் தடுப்பு திட்டம் ஆகும்.
இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688012
******************
(Release ID: 1688041)