பாதுகாப்பு அமைச்சகம்
13-வது இந்திய-வியட்நாம் ராணுவப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை
प्रविष्टि तिथि:
12 JAN 2021 3:28PM by PIB Chennai
2021 ஜனவரி 12 அன்று நடைபெற்ற 13-வது இந்திய-வியட்நாம் ராணுவப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு வியட்நாம் பாதுகாப்புத் துணை அமைச்சர் மூத்த லெஃப்டினெண்ட் ஜெனரல் குயென் சி வின்ஹ்-உடன் இணைந்து இந்திய பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் தலைமை தாங்கினார்.
காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, கொவிட்-19 தடைகளுக்கு இடையேயும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் துணை அமைச்சரும் திருப்தி தெரிவித்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் மேன்மைமிகு குயென் சுவான் புக் ஆகியோருக்கிடையே 2020 டிசம்பரில் நிறைவடைந்த காணொலி மாநாட்டை ஒட்டி வகுக்கப்பட்ட செயல்திட்டத்தை குறித்த தங்களது கருத்துகளை பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் துணை அமைச்சரும் பகிர்ந்து கொண்டனர். ராணுவ ஒத்துழைப்பில் புதிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் ராணுவ உறவுகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். பல்வேறு ராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த இரு தரப்பினரும், விரிவான யுக்தி சார்ந்த கூட்டின் கட்டமைப்பின் கீழ் ராணுவத்தினரிடையேயான ஈடுபாட்டை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687915
***
(Release ID: 1687915)
(रिलीज़ आईडी: 1687968)
आगंतुक पटल : 215