ஜல்சக்தி அமைச்சகம்

மணிப்பூர் சென்றது தேசிய ஜல் ஜீவன் திட்டக் குழு

Posted On: 12 JAN 2021 11:41AM by PIB Chennai

தேசிய ஜல் ஜீவன் திட்டக் குழுவினர் ஆறு பேர், மணிப்பூரில் ஜனவரி 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆய்வு செய்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளை இந்தக் குழு வழங்குகிறது. மணிப்பூரில் திட்டத்தை அமல்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் இந்தக் குழு அடையாளம் காணும். மேலும், மேம்பாட்டுக்கான நல்ல நடைமுறைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளை பின்பற்றும்படியும்  இந்தக் குழு எடுத்துக் கூறும். 

மணிப்பூரில் 4.51 லட்சம் கிராமப்புற வீடுகள் உள்ளன. இவற்றில் 1.67 லட்சம் வீடுகளுக்கு (37 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில், 2 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மணிப்பூர் திட்டமிட்டுள்ளது. 2021-22ம் ஆண்டுக்குள் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மணிப்பூர் திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687857

******


(Release ID: 1687857)


(Release ID: 1687900) Visitor Counter : 128