வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

புதிய நிறுவனங்கள், இளம் தொழில் முனைவோரிடையே வடகிழக்கு முதலீட்டு நிதிக்கு அமோக வரவேற்பு: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 11 JAN 2021 5:47PM by PIB Chennai

வடகிழக்கு முதலீட்டு நிதி (என்இவிஎஃப்) குறித்த தகவலை வெளியிட்டுள்ள வட கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்குப் பகுதிகளில் முதன்முறையாக ரூ. 100 கோடியை முதலீடாக செலுத்தி முதலீட்டு நிதியை அமைப்பதற்காக வடகிழக்கு மேம்பாட்டு நிதி நிறுவனத்துடன் தமது அமைச்சகம் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார். புதிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் தனித்துவம் வாய்ந்த வர்த்தக வாய்ப்புகளில் முதலீடு செய்வதை இது இலக்காகக் கொண்டுள்ளது. உணவு பதப்படுத்துதல், மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687668

-----


(Release ID: 1687728) Visitor Counter : 219