இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் : மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

Posted On: 11 JAN 2021 5:16PM by PIB Chennai

இந்தியாவை வளமான, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இளைஞர் விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாப்படுகிறது. இந்தாண்டு,  இந்த விழாவின் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவும் கொண்டாப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில், மத்திய இளைஞர் விவாகரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்  நடத்திய தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக, இந்திய ஜனநாயகம் தொடர்ந்து வளர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம், நமது ஜனநாயக பாரம்பரியப்படி சுமுகமாக நடந்துள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தைக் காண முடியும். சுதந்திரத்துக்கு முன்பு, இந்திய இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர். அதேபோல், இன்றைய இளைஞர்கள், நாட்டை வளமான பாதையில் கொண்டு சென்று முன்னேற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாடு வளம் அடைய, இளைஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க வேண்டும். இது உங்களின் கடமை மற்றும் பொறுப்பு.

இவ்வாறு திரு ஓம் பிர்லா தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களை அவர் ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் நலத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ,  நாட்டின் ஜனநாயக கோயிலில் நடக்கும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் இளைஞர்கள் பங்கேற்றது உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு நன்றி’’ என கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687655

-----



(Release ID: 1687701) Visitor Counter : 201