எஃகுத்துறை அமைச்சகம்
மங்கோலிய அமைச்சர்களுடன் திரு தர்மேந்திர பிராதன் பேச்சு
Posted On:
08 JAN 2021 6:52PM by PIB Chennai
மங்கோலியா அமைச்சர் மாண்பு மிகு திரு எல் ஆயுன்-எர்டேன், இந்தியா-மங்கோலியா ஒத்துழைப்புக்கான கூட்டுக்குழு தலைவர் மாண்பு மிகு திரு ஜி யாண்டன் ஆகியோருடன் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். ஹைட்ரோ கார்பன் மற்றும் எஃகு துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் கிரீன் பீல்டு மங்கோல் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை விரைவாக அமல்படுத்துவதற்காகவும், சைன்ஸ்கேஹணட் பகுதியில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு ஆலைக்கு, குழாய்வழி கச்சா எண்ணெய் விநியோக திட்டம் அமைப்பதில் உறுதியுடன் இருப்பதற்காகவும் எர்டேன் மற்றும் யாண்டனுக்கு மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பாராட்டு தெரிவித்தார். சுத்திகரிப்பு ஆலை திட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, குழாய்வழி கச்சா எண்ணெய் விநியோக திட்டத்தை நிறைவு செய்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
**********************
(Release ID: 1687210)
Visitor Counter : 154