பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பஞ்சாப் குடிமைப் பணிகளின் மூத்த அதிகாரிகள் குழுவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் சந்தித்தார்

Posted On: 06 JAN 2021 5:15PM by PIB Chennai

ஒவ்வொரு அதிகாரிக்கும் பதவி உயர்வும், இதர பலன்களும் சரியான நேரத்தில் கிடைத்து அவர்கள் தங்கள் சேவைகளை திறம்பட ஆற்றுவதை உறுதி செய்வதற்கான பணிகளை பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை துரிதமாக செய்து வருவதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

புது தில்லியில் தம்மை சந்தித்த, பஞ்சாப் குடிமைப் பணி மூத்த அதிகாரிகள் குழுவினரிடம் உரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த ஆறு வருடங்களாக தொழில்நுட்பத்தின் உதவியோடு செயல்பாடுகள் வேகமடைந்துள்ளதாகக் கூறினார். இந்திய ஆட்சிப் பணியில் தங்களை விரைந்து இணைக்குமாறு அதிகாரிகள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றோடு கலந்தாலோசித்து, பதவி உயர்விலும், பட்டியலிடுதலிலும் உள்ள தடைகளைக் களைந்து, துடிப்பான அணுகுமுறையை கடந்த சில வருடங்களாக பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686561

-----


(Release ID: 1686586) Visitor Counter : 177