அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவில் பெருந்தொற்று தயார் நிலை புத்தாக்கக் கூட்டணி ஆய்வு மையம் : உலகின் ஏழு ஆய்வு மையங்களில் ஒன்று
Posted On:
05 JAN 2021 5:27PM by PIB Chennai
உலகின் ஏழு ஆய்வு மையங்களில் ஒன்றான, பெருந்தொற்று தயார் நிலை புத்தாக்க கூட்டணி (செபி) ஆய்வு மையத்தை, பரிதாபாத்தில் உள்ள இடப் பெயர்வு சுகாதார அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (திஸ்தி), மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சிமூலம் இன்று தொடங்கி வைத்தார்.
திஸ்தி, உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ், இந்தியாவில் செயல்படும் ஒரே மையமாகும். இது தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் கடந்த 10 மாதங்களாக அயராது பாடு பட்ட உயிரி தொழில்நுட்ப துறையினரைப் பாராட்டினார். செபி ஆய்வு மையம், திஸ்தி ஆய்வு மையத்தின் திறனுக்கு மேலும் வலு சேர்க்கும் என்றார். ‘‘தடுப்பூசி தயாரிப்பதற்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய அளவில் அதை ஏற்றுக்கொள்வதற்கும், திஸ்தியின் திறனுக்கு செபி ஆய்வகம் கூடுதலாக வலு சேர்க்கும்’’ என அவர் கூறினார்.
கடந்தாண்டில் உலகம் தரம் வாய்ந்த கொவிட் சாதனங்களை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்திய விஞ்ஞானிகள் நம் நாட்டை மாற்றியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், விஞ்ஞானிகள், கொரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். கொவிட் -19 தடுப்பூசித் தயரிப்பில் நாடு இன்று முன்னணியில் உள்ளதையும், 30 தடுப்பூசிகளில் இரண்டுக்கு மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், மற்ற தடுப்பூசிகள் இறுதி கட்ட ஆய்வுப் பணியில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
`கொவிட்-19க்கு அறிவியல் தொழில்நுட்பத் தீர்வுகள்’ என்ற இ-புத்தகத்தையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். தொற்றை குறைப்பதில் உயிரி தெழில்நுட்ப துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தப் புத்தகம் எடுத்து கூறுகிறது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686281
**********************
(Release ID: 1686336)
Visitor Counter : 322