நிதி அமைச்சகம்

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக மாநிலங்களுக்கு பத்தாவது தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 04 JAN 2021 6:17PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக பத்தாவது தவணையாக ரூ 6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.

இதில், ரூபாய் 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூபாய் 483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (தில்லி ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.

மிச்சமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் இல்லை.

சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்தக் கடனை வாங்குகிறது.

 

இது வரை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ 60,000 கோடி கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது.

இது தவிர, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 9627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூபாய் 3870.80 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686015

**********************


(रिलीज़ आईडी: 1686103) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Telugu