விண்வெளித்துறை

தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட்டு தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும்: டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 04 JAN 2021 5:40PM by PIB Chennai

தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட்டுதற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங்  தெரிவித்தார்.

இஸ்ரோவின் சமீபத்திய சாதனைகள் மற்றும் விண்வெளித் திட்டங்கள் குறித்து டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

இந்திய விண்வெளித்துறையில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்தார். இதை நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் வரவேற்றன.

இதற்காக இந்திய தேசிய விண்வெளி வளர்ச்சி மற்றும் அங்கீகார மையம்(இன்-ஸ்பேஸ்) அமைக்கப்பட்டது. இது தனியார் நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களும் சிறந்த தளத்தை ஏற்படுத்தும்.

செயற்கை கோள்களை எடுத்துச் செல்லும் சிறிய ராக்கெட்டுகள், விண்வெளிச் சேவைகள், செயற்கைகோள் பாகங்கள் தயாரித்தல் போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடலாம். 

இந்த சீர்திருத்தங்கள் மூலம் போட்டியை சந்திக்கும் விண்வெளி சந்தையாக இந்தியா மாறும் மற்றும் விண்வெளித் திட்டத்தின் பயன்கள் ஏழைகளை சென்றடையும்.  மேலும் இந்தியாவை தற்சார்புடையதாக்க முடியும்.

 விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட, 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், விண்வெளித்துறையை அணுகியுள்ளன. 

விண்வெளி மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பம் இன்று ரயில்வே, சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமானம், வேளாண் துறை, வீட்டு வசதித் துறை, தொலை தூர மருத்துவம், பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை முன் அறிவிப்பு  ஆகியவற்றில்   அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686004

**********************(Release ID: 1686084) Visitor Counter : 8