சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

Posted On: 04 JAN 2021 5:24PM by PIB Chennai

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்  ரூ.1.59 கோடி அபராதம் விதித்தன.

கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்றவற்றால் ஏற்படும் தூசியால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும் கட்டுமான நிறுவனங்கள், கட்டிட இடிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தில்லி மாசுக் கட்டுப்பாடு வாரியங்களுக்கு, தில்லி மற்றும் தேசிய புறநகர் மண்டலத்தில் உள்ள காற்றுத்தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி  227 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 3000 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 386 இடங்களில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறிப்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.59 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685997

**********************



(Release ID: 1686072) Visitor Counter : 191