சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் - ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் 2020
Posted On:
01 JAN 2021 7:17PM by PIB Chennai
அனைத்துப் பிரிவினரும் பாதுகாப்பான, செயல்திறன் மிக்க, கௌரவமான வாழ்வை வாழ்வதற்கான அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பதே மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இலட்சியமாகும். 2020-ஆம் ஆண்டில் அமைச்சகத்தின் முக்கிய மைல்கற்கள் வருமாறு:
* பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர இன்று ஒப்புதல் அளித்தது.
* 4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாபெரும் விநியோக முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் உதவிகளையும். உபகரணங்களையும் பிரதமர் வழங்கினார். மத்திய அரசின் ஆர்விஒய் எனும் தேசிய வயோதிகர் திட்டம் மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கான ஏடிஐபி திட்டத்தின் கீழ் இந்தப் பெரு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
* மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
* மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட், திருநங்கைகளுக்கான தேசிய இணைய தளத்தையும், குஜராத்தின் வதோதராவில் திருநங்கைகளுக்கான விடுதியையும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
* பிற்படுத்தப்பட்டோருக்காக, துணிகர மூலதன நிதியத்தின் கீழ் அம்பேத்கர் சமூகப் புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் இயக்கம் (ASIIM), உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே புதுமையான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது.
* ”கிரண்” என்ற 24 மணி நேர, இலவச மனநல மறுவாழ்வு உதவி எண் (1800-599-0019) தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று நேரத்தில், மனநல பாதிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதை முன்னிட்டு, அவர்களுக்கு உதவ இந்த உதவி எண்ணை சமூக நீதி அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை தொடங்கியது.
* பாடங்களை சைகை மொழியில் மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ எஸ் எல் ஆர் டி சி மற்றும் என் சி ஈ ஆர் டி இடையே கையெழுத்தானது.
* 2020-21-ஆம் தேர்வு ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 6 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உயர் தர நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் 55 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவரின் முன்னேற்றத்துடன் பராமரிப்புப் படி இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சரிபார்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஆய்வு ரத்து செய்யப்பட்டு, சுய உறுதிமொழி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685446
-----
(Release ID: 1685497)
Visitor Counter : 507