நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்: ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் - 2020

Posted On: 31 DEC 2020 4:01PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு 39 மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மழைக்காலக் கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் சுமார் 167 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் சுமார் 100.47 சதவீதமாகவும் இருந்தது.

தற்சார்பு இந்தியாவின் முக்கியமான அங்கமான புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த வருடம் அடிக்கல் நாட்டினார். நாட்டிலுள்ள அனைத்து அவைகளுக்கும் (நாடாளுமன்றத்தின் இரு அவைகள், 31 மாநில சட்டமன்றங்கள் மற்றும் ஆறு மேலவைகள் என மொத்தம் 39) சேர்த்து தேசிய இ-விதான் செயலி எனும் மின்-தளம் உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ஐ பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், மழைக்காலக் கூட்டத் தொடரின் போது  மக்களவையின் செயல் திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும், மாநிலங்களவையின் செயல் திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

 

2020 செப்டம்பர் 14 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் 2020, 2020 அக்டோபர் 1 அன்று நிறைவடைய இருந்ததாகவும், ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றால் 10 நாட்களில், 2020 செப்டம்பர் 23 அன்றே மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன.

இடைப்பட்டக் கூட்டத் தொடரின் பிரகடனப்படுத்தப்பட்ட 11 அவசர சட்டங்கள், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-இல் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு, பிரதமர் திரு.நரேந்திரமோடி, அடிக்கல் நாட்டினார்.   இந்தப் புதிய கட்டடம், ‘தற்சார்பு இந்தியாகுறிந்த தொலை நோக்குப் பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகவும்சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகவும் அமைவதுடன், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடவுள்ள 2022-ஆம் ஆண்டில், ‘புதிய இந்தியா‘-வின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்ஜனநாயகம் என்றால், அனைத்து இடங்களிலும், தேர்தல் நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிர்வாகத்தைத் தான் குறிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.  ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது, வாழ்வியல் நற்பண்புகள், வாழ்க்கைக்கான வழி மற்றும் தேசத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறது. 

இந்திய ஜனநாயகம், பல நூற்றாண்டு கால அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.   இந்தியாவில், ஜனநாயகம் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சமாக மட்டுமின்றி, ஒழுங்கு நடைமுறையாகவும், வாழ்க்கை மந்திரமாகவும் பின்பற்றப்படுகிறது. 

இந்தியாவின் ஜனநாயக வலிமை என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.   இந்திய ஜனநாயகம், தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருவதுடன்ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685078

**********************


(Release ID: 1685211) Visitor Counter : 189