வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் – 2020 ஆண்டு நிறைவு கண்ணோட்டம்

Posted On: 31 DEC 2020 12:32PM by PIB Chennai

வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் 2020ம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய சாதனைகள்:

* வடகிழக்கு பகுதிகளுக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீதத்தை, பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கும், பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி கீழ்கண்ட திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

* வடகிழக்கு பகுதி மலைகளில் காடு வளர்ப்பு திட்டம்.

* இயற்கை முறை விவசாய மேம்பாட்டுத் திட்டம்

வடகிழக்கு பகுதி பழங்குடியின மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

* வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு மொழிகள் பற்றிய ஆய்வுஇதேபோல் பின்தங்கிய சமூகத்தினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கான பல திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டன.

வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை டிஜிட்டல் மயம்: வடகிழக்கு மேம்பாட்டு துறையில் 100 சதவீத - அலுவலக பணிகளை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கோவிட்-19 தொற்று காலத்தில் வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகத்தின் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படவில்லை.   இதனால் 2019-20ம் நிதியாண்டில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் பயன்படுத்தப்பட்டது. பணிகள் பாதிக்கப்படாமலும், ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

வடகிழக்கு பகுதியில் மூங்கில் வள மேம்பாடு: நாட்டின் 35 சதவீத மூங்கில் வளர்ப்பு பகுதிகள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. வன சட்டத்தின் கீழ் மூங்கில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளதால், இங்குள்ள மூங்கில் வளம் முழுவதும் பயன்படுத்தப்படவில்லைஇதனால் இந்திய வனச் சட்டத்தில் மரங்கள் பிரிவில் இருந்து மூங்கிலை அகற்றி, புல் இனத்தில் மத்திய அரசு சேர்த்தது. இந்த முடிவால், வடகிழக்கு பகுதியில் மூங்கில் மேம்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்பட்டது. மூங்கில் அதிகளவு பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

* இதேபோல் மற்றொரு சீர்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. மூங்கில் குச்சிகளுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இது அகர்பத்தி குச்சி தயாரிப்பு ஆலைகள் உள்நாட்டில் உருவாக வழி வகுத்தது.

* கடந்த 2019 செப்டம்பரில் இருந்து பத்தி குச்சி இறக்குமதி செய்யப்படவில்லை. உள்ளூர் மூங்கிலே பயன்படுத்தப்படுகிறது

* வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது.

* உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் இதர துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன.

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.53,374 கோடி வழங்கியுள்ளது.

* வடகிழக்கு பகுதியில் இந்திரா தனுஸ் எரிவாயு விநியோகத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.9265 கோடி அனுமதிக்கப்பட்டது.

* அருணாச்சலப் பிரதேசத்தில் ஹோலங்கி விமான நிலையம் ரூ.955.67 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022 டிசம்பர் மாதம் முடிவடையும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685004

******



(Release ID: 1685090) Visitor Counter : 162