இந்திய போட்டிகள் ஆணையம்
முகந்த் சுமி ஸ்பெஷல் ஸ்டீல்(எம்எஸ்எஸ்எஸ்எல்) நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை ஜம்னாலால் சன்ஸ் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்
Posted On:
31 DEC 2020 11:04AM by PIB Chennai
சந்தைப் போட்டிகள் சட்டம், 2002, 31(1)வது பிரிவின் கீழ், முகந்த் சுமி ஸ்பெஷல் ஸ்டீல் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை ஜம்னாலால் சன்ஸ் நிறுவனம்(ஜேஎஸ்பிஎல்) வாங்க இந்திய சந்தைப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இணைப்பு எம்எஸ்எஸ்எஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை ஜேஎஸ்பிஎல் கையப்படுத்த வழிவகுக்கிறது. இரண்டும் ஒரே குழுமத்தை சேர்ந்த நிறுவனமாகும். 60 சதவீதத்துக்கும் அதிகம் இல்லாத எம்எஸ்எஸ்எல் நிறுவனத்தின் பங்குகளை ஜேஎஸ்பிஎல் மற்றும் சில தனிநபர்களும், கம்பெனிகள் சட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பங்குதாரர்கள் தேவைக்கு ஏற்ப கூட்டாக வைத்திருப்பர்.
ஜேஎஸ்பில் நிறுவனம், பஜாஜ் குழுமத்தின் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிறுவனம். இது எந்தவித பொருட்கள் உற்பத்தியிலோ அல்லது வர்த்தகத்திலோ ஈடுபடவில்லை.
எம்எஸ்எஸ்எஸ்எல் நிறுவனம் சிறப்பு மற்றும் அலாய் எஃகு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
******
(Release ID: 1684961)
(Release ID: 1685055)
Visitor Counter : 138