ஜவுளித்துறை அமைச்சகம்

ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் 2020 - ஜவுளி அமைச்சகம்

Posted On: 30 DEC 2020 6:08PM by PIB Chennai

ஜவுளித்துறை நமது நாட்டில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்திய ஜவுளித்துறை உலகின் ஆறாவது பெரிய ஜவுளி மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதியாளர் ஆகும்.

நமது நாட்டில் வேளாண் துறைக்கு பிறகு அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை ஜவுளித்தொழில் ஆகும். வணிக ஏற்றுமதிகளில் இதன் பங்கு 12 சதவீதம் ஆகும். 2020-ஆம் ஆண்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ஜவுளி அமைச்சகம் எடுத்தது. இதன் விளைவாக இத்தொழில் முக்கியமான மைல்கல்களைக் கண்டு வளர்ச்சியடைந்தது. முக்கியமான சில அம்சங்கள் வருமாறு:

* ரூ 7,000 கோடி மதிப்பிலான தனிநபர் பாதுகாப்பு உபகரண உற்பத்தி என்னும் புதிய தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது.

* 1100 தனிநபர் பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் தினமும் 4.5 இலட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்ததன் மூலம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தனிநபர் பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.

* ரூ 1480 கோடி மதிப்பில் தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* சுத்தப்படுத்தப்பட்ட டெரெப்தாலிக் அமிலம் மற்றும் அக்ரிலிக் நார் மீதான பொருள் குவிப்புக்கு எதிரான வரி நீக்கப்பட்டது.

* இந்தியப் பருத்திக்கு கஸ்தூரி காட்டன் இந்தியாஎன்னும் வணிகப் பெயர் சூட்டப்பட்டு, இலச்சினையும் வெளியிடப்பட்டது.

* கைத்தறி நெசவாளர்கள்/கைவினைக் கலைஞர்கள்/உற்பத்தியாளர்களுக்கு பெரிய சந்தையை வழங்கும் விதமாக அரசு மின் சந்தைத் தளத்தில் பங்கேற்பு.

* கைவினைப் பொருள்கள் மற்றும் கையால் செய்யப்படும் பொம்மைகள் தொழில் உள்ளிட்ட இந்திய பொம்மைத் தொழிலை ஊக்குவிக்க தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது.

* 2021 பிப்ரவரி 27-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை தேசிய பொம்மைக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684735

**********************


(Release ID: 1684836) Visitor Counter : 201