நிதி அமைச்சகம்
பரிமாற்ற விகித அறிக்கை எண். 114/2020-சுங்கம் (என்.டி)
Posted On:
30 DEC 2020 3:22PM by PIB Chennai
ஏற்றுமதி, இறக்குமதிக்கான துருக்கி லிரா பணப்பரிமாற்ற விகிதத்தை சுங்கத்துறை அறிவித்துள்ளது.
சுங்கத்துறைச் சட்டம் 1962 (1962-இல் 52) பிரிவு 14-இல் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கீழ்கண்ட திருத்தத்தை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் எண் 113/2020-சுங்கம் (என்.டி) என்ற அறிவிப்பை 2020 டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இது டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
அட்டவணை ஒன்றில் கூறப்பட்டுள்ள அறிவிப்பில் வரிசை எண் 18-இன் படி அதனுடன் தொடர்புடைய உள்ளீடுகள் பின்வருமாறு மாற்றப்படுகிறது.
ஒரு துருக்கிய லிராவுக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு ரூ. 10.25 என்றும், ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு ரூ.9.65 என்றும் இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684620
**********************
(Release ID: 1684814)
Visitor Counter : 172