வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்குப் பகுதியின் இஞ்சிப் பதப்படுத்தும் முதல் சிறப்பு ஆலைக்குப் புத்தாக்கம் அளிக்கப்பட்டு வருகிறது: டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
30 DEC 2020 5:39PM by PIB Chennai
மேகாலயாவின் ரி-போயி மாவட்டத்தில் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதியின் இஞ்சி பதப்படுத்தும் முதல் சிறப்பு ஆலைக்கு புத்தாக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்த ஆலை செயல்படத் தொடங்கும்.
மத்திய வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் மேற்காணும் தகவல்களைத் தெரிவித்தார்.
மத்திய வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான வடகிழக்குப் பிராந்திய விவசாய சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வடகிழக்குப் பகுதியின் முதல் மற்றும் ஒரே சிறப்பு இஞ்சிப் பதப்படுத்தும் ஆலை 2004-இல் நிறுவப்பட்டதென்றும், ஆனால் கடந்த பல வருடங்களாகச் செயல்படாமல் இருந்ததாகவும் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
இஞ்சியைப் பதப்படுத்தும் ஆலைக்குப் புத்தாக்கம் அளிக்கும் நடவடிக்கைகளை வடகிழக்குப் பிராந்திய விவசாயச் சந்தைப்படுத்துதல் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், மூடப்பட்டிருக்கும் ஆலையை அரசு-தனியார் கூட்டு முறையின் மூலம் செயல்பட வைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்;
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684694
**********************
(Release ID: 1684812)
Visitor Counter : 215