மத்திய அமைச்சரவை

எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 DEC 2020 3:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

செயல்படுத்தும் நடைமுறை:

இந்த நாடுகளில் இந்திய தூதரகம் அமைப்பதன் வாயிலாக இந்தியாவின் ஆட்சித் திறன் வலுவடைவதோடு, அரசியல் உறவுமுறையும் மேம்படும்; இருநாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவு ஏற்படும்; முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; இரு நாடுகளின் மக்களிடையேயான தொடர்பு வலுப்பெறும்; இந்தியாவின் அந்நிய கொள்கைகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

மேலும் இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலமும் இதன்மூலம் பாதுகாக்கப்படும்.

குறிக்கோள்:

நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நட்பு நாடுகளுடன் இணக்கமான சூழலை அமைப்பதே நமது அந்நிய நாட்டுக் கொள்கையின் முக்கிய குறிக்கோளாகும். நமது கூட்டணி நாடுகளுடனான உறவு முறையை வலுப்படுத்தும் வகையில் தற்போது உலகெங்கிலும் நமது தூதரகங்கள் இயங்குகின்றன.

 

நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாகவும், ‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைவோம்என்ற நோக்கத்தை செயல்படுத்தவும் இந்த மூன்று நாடுகளில் தூதரகங்கள் அமைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளுடன் இந்தியாவின் பரஸ்பர நல்லிணக்க முயற்சியினால் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி, இந்திய நிறுவனங்களுக்கு அந்த நாடுகளில் சந்தைபடுத்துதலுக்கான வாய்ப்புகள் ஆகியவையும் கிடைக்கும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி நேயடியாக ஊக்குவிக்கப்பட்டு, தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684621

-----

 (Release ID: 1684730) Visitor Counter : 13